சமூக வலைதளங்களில் தற்போது சோமாட்டோ டெலிவரி ஊழியர் தொடர்பான வீடியோ ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்குர் தாக்கூர் என்ற அந்த ஊழியர், நள்ளிரவில் வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு கொண்டு சென்றபோது, உணவை கீழே வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால், உணவை வீட்டிற்கே கொண்டு வந்து தர வேண்டும் அல்லது ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என வாடிக்கையாளர் பிடிவாதம் பிடித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் டெலிவரி செய்யப்படாத அந்த உணவை, அந்த ஊழியர் சாலையோரம் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த வீடியோ சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், இணையவாசிகள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

வாடிக்கையாளர்கள் டெலிவரி கட்டணம் செலுத்துவதால் உணவை வீட்டு வாசலில் தருவதுதான் முறை என்று ஒரு தரப்பினரும், நள்ளிரவு நேர பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் கஷ்டங்களை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ankur thakur (@ankurthakur7127)

“>

உணவு நிறுவனங்கள் விரைவான டெலிவரி மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசி வரும் வேளையில், இந்தச் சம்பவம் சேவை தரம் மற்றும் ஊழியர்களின் நிலை குறித்த புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.