தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, கரூர் மற்றும் சேலம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழையும் சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
