ஐடி நிறுவனங்களில் தற்போது அப்ரைசல் (Appraisal) சீசன் களைகட்டியுள்ள நிலையில், ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த விசித்திரமான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பல மாதங்களாகச் சம்பள உயர்வுக்காகக் காத்திருந்த அந்த ஊழியர், அப்ரைசல் கூட்டத்தின் போது தனது சம்பளத்தை உயர்த்திக் கேட்டார். ஆனால், அவருக்கு இன்கிரிமென்ட் கொடுப்பதற்குப் பதிலாக, “நீ வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறு இடத்தைத் தேடிக்கொள்” என மேலாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.

​அந்த ஊழியர் ஒரு செமிகண்டக்டர் நிறுவனத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனம் வழங்கும் தொகையை விட, இந்த ஊழியருக்குத் தனது நிறுவனம் கொடுக்கும் சம்பளம் அதிகமாக இருப்பதாகவும், அந்த வித்தியாசத்தைக் காரணம் காட்டியே அவரை வெளியேறச் சொன்னதாகவும் தெரிகிறது. “ராஜினாமா செய்ய எனக்கு விருப்பமில்லை, அதே சமயம் நல்ல பேக்கேஜ் பெற என்ன செய்ய வேண்டும்?” என அவர் பதிவிட்ட கேள்விக்கு, “நீயாக விலகாதே, நிறுவனம் உன்னை நீக்கினால் மட்டுமே உனக்கு அதிக இழப்பீடு கிடைக்கும்” என இணையவாசிகள் பலரும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.