சமூக வலைதளங்களில் தினமும் பல பாம்பு வீடியோக்கள் வைரலானாலும், தற்போது மக்கள் நடமாடும் சாலையில் அரங்கேறியுள்ள இந்த வீடியோ பார்ப்பவர்களை ஒரு நிமிடம் உறைய வைத்துள்ளது. பொதுவாகப் பாம்புகளைக் கண்டாலே அலறியடித்து ஓடும் மக்கள், அவை ஜோடியாகப் பிண்ணிப் பிணைந்து இருப்பதைப் பார்த்தால் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்ப்பதுண்டு. அப்படி, ஒரு சாலையில் சுமார் 8 அடி நீளம் கொண்ட இரண்டு பாம்புகள், வாகனப் போக்குவரத்தைப் பற்றியும் கவலைப்படாமல் ஒன்றுக்கொன்று ஆலிங்கனம் செய்தபடி காதலில் திளைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இருப்பினும், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி நெட்டிசன்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. பாம்புகள் தங்களுக்குள் பிண்ணிப் பிணைந்து இருக்கும் போது, அங்கிருந்த சிலர் அவற்றின் மீது துணியைப் போட்டு இடையூறு செய்துள்ளனர். “இயற்கையான ஒரு விஷயத்தில் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்வதா?” என officialvishu71 என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பார்ப்பதற்குச் சிலிர்ப்பை ஏற்படுத்தினாலும், சாலையில் மக்கள் செய்த இந்த செயல் வேதனையளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
