தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டாலே போதும், வெளியில் தலை காட்ட முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அதில் பயணிப்பவர்களுக்கு அந்த அனல் காற்று பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தின் மேல் கூரையில் தென்னங்கீற்றுகளை அடுக்கி, ஒரு இயற்கையான குளிரூட்டியை உருவாக்கியுள்ளார். அந்த ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள், “உள்ளே ஏறியதும் அவ்வளவு ஜாலியாக இருக்கிறது, அனல் காற்று அடிக்கவில்லை” என பாராட்டி வருகின்றனர்.
”கூரை போட்டா குளுகுளுனு இருக்குமாம்”.. ஆட்டோவுக்கு தென்னங்கீற்று கூரை அமைத்து கவனம் ஈர்த்த டிரைவர்!#Tiruvarur #Autodriver #Roof #Auto #NewsTamil24x7 pic.twitter.com/HoQQY6Bndp
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) April 24, 2026
இந்தச் சம்பவம் குறித்து பேசியுள்ள அந்த ஆட்டோ ஓட்டுநர், “வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இப்படி ஒரு முயற்சியை எடுத்தேன். இது பயணிகளுக்கும் பிடித்திருக்கிறது, எனக்கும் வண்டி ஓட்டும்போது சூடு தெரிவதில்லை. இன்னும் கூடுதலாகக் கீற்றுகளை வைக்கப் போகிறேன்” என உற்சாகமாகத் தெரிவித்துள்ளார். தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “நிஜமாவே இது ஒரு நல்ல ஐடியா தான், இயற்கை முறையில் வெப்பத்தைத் தணிக்க இதுதான் சிறந்த வழி” என அந்த ஓட்டுநரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி வருகின்றனர்.
