சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு தாய் தனது சிறுவனிடம், “நான் உன்னை விட்டுட்டு எங்கேயாவது போயிட்டு திரும்ப வரலன்னா என்ன பண்ணுவ?” என்று விளையாட்டாகக் கேட்கிறார். முதலில் சமாளிக்கும் அந்தச் சிறுவன், தாய் மீண்டும் மீண்டும் அதையே கேட்கவும், “நீங்க இறந்து போயிருவீங்களா? எனக்கு பயமா இருக்கு” என்று கதறி அழுவது பார்ப்பவர் நெஞ்சைக் கசக்குகிறது. கடைசியில் அந்தத் தாய் சமாதானம் செய்தாலும், ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் மனதில் ‘மரண பயத்தை’ விதைத்து, அதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காகப் பதிவிடுவதா எனப் பலரும் அந்தத் தாயைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“குழந்தை வளர்ப்பில் இதெல்லாம் தேவையற்ற விளையாட்டு; இது அவர்களின் மனநிலையைப் பாதிக்கும்” எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kiaansh 🐻 (@wiggle_bear_)

“>