தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து சபரிமலை நோக்கிப் பாதயாத்திரையாகச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது, திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை நோக்கிச் சென்ற வேன் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆண்டிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த மாரிச்சாமி (55) என்ற குருசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர், புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் இரவு ஆண்டிபட்டியில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் நேற்று அதிகாலை சின்னமனூர் அருகே கோட்டூர் – சீலையம்பட்டி சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த ‘டெம்போ டிராவலர்’ வேன் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

 

“>

 

இந்த விபத்தில் மாரிச்சாமி மற்றும் ராம்கி (36) ஆகிய இரு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.

“>

 

இது குறித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சின்னமனூர் போலீசார் வேன் ஓட்டுநர் தினேஷ்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.