இந்தோனேசியாவில் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை, உள்ளூர் மக்கள் கயிறுக்குப் பதிலாக ஆரஞ்சு நிற ஒட்டும் நாடாக்களைக் கொண்டு மம்மி போல உடல் முழுவதும் சுற்றிய விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வசிப்பிடப் பகுதி ஒன்றில் உள்ள கடை ஒன்றில் திருட முயன்றபோது, அப்பகுதி மக்கள் அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர். காவல் துறையினர் வரும் வரை அவர்கள் தப்பித்துச் செல்லாமல் இருக்க, அவர்களைக் கடுமையாகத் தாக்குவதற்குப் பதிலாக, இவ்வாறு உடல் முழுவதும் ஒட்டும் நாடாவால் சுற்றியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தகைய தண்டனை முறை சரியானதா அல்லது மனிதாபிமானமற்றதா என்பது குறித்து மக்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
View this post on Instagram
“>
திருட்டைத் தடுக்க இது ஒரு பயனுள்ள யுக்தி என்று சிலர் ஆதரிக்கும் அதே வேளையில், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு ஒருவரை இழிவுபடுத்துவது தவறு என்று மற்றவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் விரக்தியடைந்த மக்கள், இதுபோன்ற விசித்திரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இந்தோனேசியாவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
