இந்தியாவின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகத் தீவிரமான அவதூறு பிரசாரங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டு வருகிறது.
இதற்காக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் இந்தியாவுக்கு எதிராக ஒரு புதிய ‘தகவல் போர்’ (Narrative War) தந்திரத்தைத் தொஇதற்காக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் இந்தியாவுக்கு எதிராக ஒரு புதிய ‘தகவல் போர்’ தந்திரத்தைத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, பஞ்சாப், காஷ்மீர் மற்றும் இந்தியாவின் சிறுபான்மையினர் தொடர்பான விவகாரங்களை பெரிதுபடுத்தி, சர்வதேச அரங்கில் இந்தியாவைச் சிறுமைப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
டங்கியுள்ளன. குறிப்பாக, பஞ்சாப், காஷ்மீர் மற்றும் இந்தியாவின் சிறுபான்மையினர் தொடர்பான விவகாரங்களை பெரிதுபடுத்தி, சர்வதேச அரங்கில் இந்தியாவைச் சிறுமைப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப், அந்நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்களுடன் ரகசியக் கூட்டங்களை நடத்தி, இந்தியாவிற்கு எதிரான தவறான தகவல்களைப் பரப்ப அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை மறைத்து, இந்தியாவின் வறுமை மற்றும் அரசியல் உள்நாட்டுச் சிக்கல்களை மிகைப்படுத்திக் காட்டி, இந்தியா ஒரு நிலையற்ற நாடு என்று உலக நாடுகளிடம் சித்தரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
தங்களது நாட்டு மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டுவதன் மூலம், சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயரைக் கெடுப்பதே இவர்களின் பிரதான நோக்கமாக உள்ளது.
