இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனிக்கு இந்தியாவில் கிடைக்கும் அசாத்தியமான வரவேற்பு மற்றும் பாதுகாப்பு குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வியந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் போது தோனி பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்ததைச் சுட்டிக்காட்டிய வாகன், “இந்தியாவில் தோனிக்கு ஒரு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கருக்கு மட்டுமே இதுபோன்ற மிகப்பெரிய கெளரவம் கிடைத்ததை பார்த்துள்ளதாகவும், தற்போது தோனியும் அதே நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தோனி இந்தியா முழுவதும் எங்குச் சென்றாலும் அவருக்குப் பாதுகாப்பாக ஒரு உண்மையான ராணுவப்படையே (Army) இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக வாகன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மைக்கேல் வாகனின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ‘தல’ ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
