பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடர் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து, ஆப்கான் தலிபான் அரசு பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது.

இந்த அபாயகரமான சூழலில், பிஎஸ்எல் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ள டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசும் தனது நாட்டு குடிமக்களைப் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, வீரர்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அவசர கால வெளியேற்றத்திற்காகத் தனி ஜெட் விமானம் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் கூறி வீரர்களை வரவழைக்கக் கெஞ்சி வருகிறார்.

இருப்பினும், வான்வெளி மூடப்பட்டால் தப்பிக்க வழி இருக்காது என்பதால் ஆஸி. வீரர்கள் தொடரைப் புறக்கணிப்பதில் உறுதியாக உள்ளனர்.