பத்து அணிகள் மோதும் 16வது ஐபிஎல் தொடர் இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2023 போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதனைப் போலவே ஆன்லைனில் ஜியோ சினிமாவில் முற்றிலும் இலவசமாக ஸ்டிரீம் செய்யப்பட உள்ளன. ஐபிஎல் 2023 இலவசமாக 4k தரத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.