அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதற்கு ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதிகபட்ச கொழுப்பு 5.9%, இதர சத்துக்கள் 9.0 சதவீதம் உள்ள பாலுக்கு 40.95 ரூபாய் கொள்முதல் விலை வழங்கப்பட்டு வந்தது.

பாலின் விலையை தரத்திற்கு ஏற்ப பிரித்து 6.0, 6.1, 6.2, 7.5 என தரப்பட்டியலை உயர்த்தி உச்சபட்சமாக 7.5% வரை பால் கொள்முதல் விலை பட்டியல் விரிவாக்கம் செய்துள்ளது. கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.