சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். சமீபத்தில் அதிமுக மற்றும் பாஜக உடனான கூட்டணி முறிவு பெற்ற நிலையில் இந்த முறிவு என்பது இரண்டு கோடி தொண்டர்களின் முடிவு என்றும் அதில் உறுதியாக இருப்பதாகவும் இபிஎஸ் கூறிய நிலையில் பாஜக ஆதரவு நிலைப்பாடு குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.