தமிழக அரசியல் களத்தில் மதிமுக மற்றும் திமுக இடையேயான உறவு முறிவைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உத்தரவுக்கு எதிராக வெளிப்படையாகக் களம் இறங்கியுள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிவுறுத்தலையும் மீறி, தாங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடரப் போவதாகவும் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டுள்ள அந்த இரு எம்.எல்.ஏ.க்களான டி.எம். ராஜேந்திரன் மற்றும் ஆர். செந்தில் செல்வன், தங்களது தேர்தல் வெற்றியைத் தந்த கட்சியின் அடையாளத்துடனே தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டதை அடுத்து, வைகோ தனது கட்சியினர் உடனடியாகப் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். ஆனால், அதற்குச் சம்மதிக்க மறுத்துள்ள இந்த இரு தலைவர்களும், வைகோவின் உத்தரவை வெளிப்படையாகத் த தள்ளுபடி செய்துள்ளனர்.

“>

 

கூட்டணி முறிவு நிகழ்ந்த கையேடு சொந்தக் கட்சிக் கட்டுப்பாட்டைக் மீறி எம்.எல்.ஏ.க்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.