திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பேருந்து நிறுத்தம் அருகே, டூவீலருக்குள் புகுந்த விஷப் பாம்பை நபர் ஒருவர் அசாத்திய தைரியத்துடன் எந்தவித உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையாலேயே பிடித்துத் தரையில் ஓங்கி அடித்துக் கொன்ற  பகீர் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பேருந்து நிறுத்தம் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பரபரப்பான பொது இடத்தில், நின்றுகொண்டிருந்த ஸ்கூட்டி வண்டிக்குள் திடீரென விஷப் பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கிருந்த பயணிகள் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

ஆபத்தை உணராமல் வண்டியைச் சாய்ச்சுப் பாம்பின் வாலைப் பிடித்து இழுத்துத் தரையில போட்டுத் துவம்சம் செய்த அந்த நபரின் மெகா அதிரடி வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.