காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சியில் நடக்கும் பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத மணல் திருட்டு (Sand smuggling) விவகாரங்களுக்கு எதிராகத் தொடர்ந்து தைரியமாக குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் மைக்கேல்ராஜ் என்பவரை, திமுக கவுன்சிலர் பால்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் வீட்டின் உள்ளே புகுந்து கொடூரமாகத் தாக்கிய மெகா அராஜகச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது.
மக்கள் நலனுக்காகப் போராடிய ஒருவரை திமுக பிரமுகரே ஆட்களைத் திரட்டி வந்து அராஜகமாக அடித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி மாபெரும் விவாதப் புயலையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மைக்கேல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக ஆக்ஷனில் இறங்கிய போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட கவுன்சிலரின் ஆதரவாளர்கள் 3 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மேலும், தலைமறைவாகியுள்ள முக்கியக் குற்றவாளியான திமுக கவுன்சிலர் பால்ராஜைப் போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
