இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகமாக உள்ளது. அப்படி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளது. போன் கால், எஸ் எம் எஸ் மற்றும் வாட்ஸ் அப் என பல வசதிகள் உள்ளது. ஆனால் எப்படி முன்பதிவு செய்தாலும் கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இப்படியான நிலையில் பாரத் கேஸ் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்க 24 மணி நேரமும் சமையல் எரிவாயு நிரப்பும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஏடிஎம் சென்று பணம் எடுப்பது போல காலி சிலிண்டர்களில் சமையல் எரிவாயு நிரப்பி புதிய சமையல் எரிவாயு இணைப்பை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் தற்போது டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் கேஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஏடிஎம் கேஸ் திட்டம் சென்னை, பெங்களூர், மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற பல்வேறு பெரு நகரங்களுக்கு அறிமுகம் செய்தால் பயனுள்ள திட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் 5 கிலோ என்ற சிறிய அளவிலான சிலிண்டர்களில் மட்டுமே எரிவாயு நிரப்பப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
