மேற்குவங்க மாநிலம் புர்டோலா பகுதியை சேர்ந்தவர் கோஷ். இவர் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி கோஷ் அதே பகுதியைச் சேர்ந்த ஏழு மாத குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோஷை கைது செய்தனர். கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி போலீசார் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நேற்று முடிவடைந்தது. இந்த நிலையில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்திரிலா கோஷுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். கைது செய்யப்பட்ட 76 நாட்களில் கோஷுக்கு தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.