காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியில் சங்கர் கோமளா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மணிமேகலை (29) என்ற மகள் இருந்துள்ளார். இவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்ததால் பூ முடிப்பு நிகழ்ச்சிக்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இவருக்கு ஏற்கனவே கிருபாக்ஷினி என்ற எட்டு வயது மகள் இருந்துள்ளார்.

இதில் மணிமேகலை நேற்று முன்தினம் கேஸ் அடுப்பில் சுடுதண்ணீர் வைத்துவிட்டு தன் மகளை பாத்ரூமில் வைத்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதில் மணிமேகலை மற்றும் அவரது மகள் இருவரும் சிக்கி பலத்த காயமடைந்த  நிலையில் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கபட்டு வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.