சென்னை மாவட்டம் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் பிற பொருட்களை சேகரித்து எடைக்கு போட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. அதே பகுதியைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.

நேற்று முன்தினம் காலை மதுபான கடைக்கு முன்பு ரத்த காயங்களுடன் ஹரிகிருஷ்ணன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரேம்குமாரை கைது செய்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது பிரேம்குமார் ஹரி கிருஷ்ணனிடம் மது வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார்.

அதற்கு ஹரிகிருஷ்ணன் தன்னிடம் பணம் இல்லை என கூறி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரேம்குமார் கட்டையால் ஹரிகிருஷ்ணனின் தலையில் அடித்து பின்னர் மார்பு பகுதியில் கல்லை போட்டதால் எலும்புகள் உடைந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.