தமிழகத்தில் இந்த ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திறமையானவர்களை கண்டறிந்து ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்ல செய்யும் நோக்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதனைத் தொடர்ந்து கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கான பிரசார ஊர்தி இன்று ஜனவரி 7 முதல் 12 நாட்களுக்கு தமிழகத்தில் 38 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ய உள்ளது.