தமிழகத்தில் எளிய முறையில் மக்கள் ஆவண பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளை தொய்வின்றி வசூலிப்பது, சார் பதிவகங்களில் உரிய காரணங்கள் இன்றி நிலுவையில் உள்ள ஆவணங்களை விடுவிப்பது, எளிய முறையில் பொதுமக்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை எட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

பதிவுத்துறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அடைந்த வருவாயை விட 2023 ஆம் ஆண்டு டிசம்பர் காலத்தில் கூடுதலாக 916 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.