நடைபயணம் என்ற போர்வையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உல்லாச பயணம் மேற்கொண்டு வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடைபயணம் என்ற போர்வையில் உல்லாச பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் உண்மைக்கு புறம்பான மற்றும் ஆதாரமற்ற அவதூறான கருத்துக்களை கூறி வருகின்றார். தமிழகத்தின் நிதிநிலை ஆதாரத்திற்கு சென்று விட்டதாக அண்ணாமலை விமர்சித்திறந்த நிலையில் கே எஸ் அழகிரி தற்போது இவ்வாறு விமர்சித்துள்ளார்.