இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் அதிகரித்து வருகிறது என நாம் புலம்புகிறோம். ஆனால் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மகளின் பள்ளி கட்டணம் தலைச்சுற்ற வைக்கிறது. நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மகளின் பள்ளி கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன் விவரம் ஒன்று சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகிறது. அவர் படிக்கும் பள்ளியில் LKG முதல் 7ம் வகுப்பு வரை ரூ.1.70 லட்சமும், 8 ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ரூ.4.48 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவர், திருபானி அம்பானி சர்வதேச பள்ளியில் தற்போது 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.