லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், 24ஆம் தேதி வரை மட்டும் தலா 5 சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.