தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் இதுவரை இல்லாத அளவில் அதிக படியாக விற்கப்படுவதாக விஜய் ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 3000 ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை கேட்பதாகவும் மற்ற நகரங்களில் ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகிறார்கள். விஜய் ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் கட்டண கொள்ளை நடப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.