தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டுக்கு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் இருந்து சீமான் பிரசாரத்தை தொடங்கினார். கன்னியாகுமரி ஆலய சந்திப்பு பகுதியில் நேற்று சீமான் பேச முற்பட்ட போது ‘மைக்’ திடீரென மக்கர் செய்தது.

உடனே அவர் சவுண்ட் ஆபரேட் செய்த நபரை திரும்பி, திரும்பி பார்த்தார். 3 முறை இதே நிலை ஏற்பட்டது. கேட்ட சின்னம்தான் கொடுக்கவில்லை. கொடுத்த சின்னமும் இப்படி மக்கர் பண்ணுதே என நாம் தமிழர் கட்சியினர் நொந்து போயினர்.