கோவையில் அண்ணாமலை வெற்றி பெற பாமக முழு மூச்சுடன் களப்பணி செய்யுமென கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவையில் பாமகவுக்கு வேட்புமனு, தேர்தல் அலுவலகம் திறப்பிற்கு அழைப்பில்லை என்பதால் தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் நிர்வாகி ராஜ் அறிவித்திருந்தார். கூட்டணி தர்மத்தை விட சுயமரியாதை முக்கியம் என ராஜ் கூறிய நிலையில், ஒரே நாளில் ‘அந்தர்பல்டி’ அடித்துள்ளார்