தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தேர்தல் அன்று வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ப்படும் இது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பாக மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் தெரிவிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் தற்போது புகார் எண்களை வெளியிட்டுள்ளது.