வெளிநாட்டு உயிரினங்களை வைத்திருப்பவரும் வாங்குவோரும் இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெறுவது கட்டாயம் என தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. இதனை பரிவேஷ் 2.0 இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெற வேண்டும். உரிமையாளர் தான் வைத்திருக்கும் உயிரினத்திற்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.