தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வேண்டாம் மோடி என்ற குரல் தெற்கில் இருந்து இந்தியா முழுவதும் கேட்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் பிரச்சாரம் செய்த அவர், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தல் அமைதியும் தொழில் வளர்ச்சியும் போய்விடும் என்றார். பத்து ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகள் குறித்து மோடி பேசாதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், அதிமுக குறித்து சொல்ல ஒன்றும் இல்லை” simply waste ‘என்று தெரிவித்தார்.