தீபாவளி வரும் அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்பட இருப்பதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, பெரும் அளவிலான பயணிகள் முன்பதிவு செய்ய இருப்பதை கருத்தில் கொண்டு, IRCTC டிக்கெட் புக்கிங் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 17-ம் தேதிக்கான டிக்கெட் புக்கிங் திங்கள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 18-க்கு செவ்வாய்க்கிழமை, 19-க்கு புதன்கிழமை, 20-க்கு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கும்.
