தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், நெல்லையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சிறப்பு ரயில் (எண் 06156) அக்டோபர் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் காலை 4 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டில் சென்றடையும். இதன்மூலம், பண்டிகை காலத்தில் அதிகப்படியான பயணிகள் நெரிசலை குறைக்கும் நோக்கில் கூடுதல் சேவை வழங்கப்பட உள்ளது.

அதேபோல், செங்கல்பட்டில் இருந்து நெல்லை நோக்கி சிறப்பு ரயில் (எண் 06155) அதே தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு நெல்லையில் சென்றடையும். மேலும், சென்னை சென்ட்ரல் – மங்களூரு – சென்னை சென்ட்ரல் வழித்தடத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் அதிகப்படியான மக்கள் திரளைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.