அதிமுக, பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துவிட்டதாக அக்கட்சித் தலைவர் ஜான்பாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என இதற்கு முன்பு கூறியிருந்த அவர், சமீபத்தில் நெல்லையில் எடப்பாடி பழனிசாமியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் NDA கூட்டணியிலேயே இருப்பதை உறுதி செய்துள்ளார்.
