கடந்த ஒரு வாரமாக ஆபரணத் தங்க விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் தற்போது சவரனுக்கு ரூ.74,200க்கும், கிராமுக்கு ரூ.9,275க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை மீண்டும் உயரும் என எதிர்பார்த்த நிலையில், மாற்றமின்றி தொடர்வதால் நகை வாங்குபவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
