தமிழகத்தில் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்ட விடியல் பயணத் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். திமுக அரசு பதவி ஏற்று 51 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ₹1,000 சேமித்து, இதுவரை ஒவ்வொரு பெண்ணும் ரூ.50,000 வரை சேமிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதில் இந்த திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது எனவும், மகளிரின் முன்னேற்றத்திற்காக அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் முதல்வர் பெருமிததுடன் கூறினார்.
“வீட்டவிட்டு வெளிய போயிட்டு வரணும்னாலே 50 ரூபாய் தேவை. நான் வீட்டுலயே இருந்துக்குறேன்” என்ற எண்ணத்தை – பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான – வேலைவாய்ப்புக்கான – முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது #விடியல்_பயணம்!
நமது #DravidianModel-இன் 51 மாதங்களுக்குள் விடியல்… pic.twitter.com/t16ZJ2Qzwi
— M.K.Stalin (@mkstalin) August 18, 2025
“>
