டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ராம்சரண் மனைவி உபசனா கடந்த ஜூன் 24ஆம் தேதி தனது ட்விட்டரில் தங்கள் குழந்தையை வரவேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் எங்கள் குழந்தைக்கு கிடைத்திருக்கும் அன்பான வரவேற்பு அமோகமானது, உங்கள் அன்பு, பாசம் மற்றும் ஆசிகளுக்கு நன்றி என்று குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.