மாரி செல்வராஜ் டைரக்டில் இன்னும் 2 நாட்களில் திரைக்கு வர இருக்கும் படம் “மாமன்னன்”. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அடிமுறை கலையை கற்றுதரும் உதயநிதி ஸ்டாலின் தன் சிறு வயதில் ஏற்பட்ட சம்பவத்தால் தந்தை வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை இன்றி இருக்கிறார்.

இதனிடையே ஊருக்குள் மக்களை கொடுமைப்படுத்தி வரும் நபருக்கு எதிரான விஷயங்களை வடிவேலு திரட்டி வருகிறார். இச்சமயத்தில் தனது தந்தையின் நிலைமையை புரிந்துகொண்டு அவருடன் இணைகிறார் உதயநிதி. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கடினமான நிலைமையை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே படத்தின் மீதி கதை என தகவல் வெளியாகி இருக்கிறது.