’பிளஸ் 2’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜா வருணி. அதன் பிறகு இவர், ’வர்ணஜாலம்’ ’கஸ்தூரிமான்’ ’மாயாவி’ ’காதல் செய்ய விரும்பு’ ’பள்ளிக்கூடம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் கலந்து கொண்டார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிளாமரான புகைப்படங்களை பதிவிட்ட சுஜா வருணி

சுஜாவுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் செய்த சுஜா வருணி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.