மலையாள பிரபல நடிகர் மம்முட்டி பசூக்கா என்ற  படத்திற்காக ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பழம்பெரும் எழுத்தாளர் கலூர் டென்னிஸின் மகன் தீனோ எழுதி இயக்கியிருக்கும்’பசூக்கா படத்தில் மம்முட்டி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஷைன் டாம் சாக்கோ , காயத்ரி ஐயர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெங்களூர் மற்றும் கொச்சியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.