கேரளாவின் இடுக்கி மாவட்டம் மறையூரில் விளையாத் புத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் நம்பியார் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிக்கும் திரைப்படம் தான் விளையாத் புத்தா. இயக்குனர் சச்சியின் முந்தைய படமான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தில் ஜெயநம்பியார் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.