தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அனுபவம் மிக்க தலைவர் என்றும் அதனால் தான் கரூர் சம்பவத்தில் நடிகர் விஜயை கைது செய்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் நிதானமாக செயல்படுகிறார் என்றும் கூறினார். இது பற்றி இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, நடிகர் விஜய் கரூர் சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்கணும். இப்படி செய்வது குற்றத்தை ஏற்பது போன்று ஆகாது.
நடிகர் விஜயை கைது செய்தால் அது மற்ற கட்சிகளை பாதிக்கும். நான் நியாயமான விஷயத்தை கூறினால் முதல்வருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுகிறார்கள். கரூர் சம்பவம் ஒரு விபத்து தான். இதில் மற்றவர்கள் மீது பழி போடுவது தவறு. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி குள்ளநரித்தனமாக உயிரிழப்பு நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்வதோடு ஆளும் கட்சி மீது பழி போடுகிறார்.
பழனிச்சாமியை தவிர குமாரசாமி மற்றும் குப்புசாமி என யார் வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளராகளாம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்க முடியாது. மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவது மட்டும் தான் அமமுக கட்சியின் நோக்கம் என்றார். மேலும் முன்னதாக டிடிவி தினகரன் தூத்துக்குடிக்கு குழு அனுப்பாத பாஜக கரூருக்கு மட்டும் அனுப்பியது ஏன் எனவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பாஜகவும் அரசியல் செய்கிறது என்றும் அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
