இந்திய ரக்கட் பிரியர்களுக்காகவே பிரத்தியேகமான மெட்டல் டிசைனில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல் அமோலெட் டிஸ்ப்ளே , ப்ளூடூத் காலிங் மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் ஃபயர் போல்ட் கமாண்டோ ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.95 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ப்ளூடூத் காலிங், 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள், நான்கு ஹெல்த் மானிட்டர்கள் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஐந்து நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கும் எனவும் இதன் விலை 2999 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.