உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செய்தியை பயன்படுத்தி வரும் நிலையில் தினம் தோறும் பயனர்களுக்கு ஏற்றவாறு புது புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பொது கணக்குகளை கொண்ட பயனாளிகள் தங்களின் எந்த போஸ்டில் இருந்தும் தாங்கள் விரும்பும் கமெண்ட்களை ஸ்டோரிகளில் ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் முக்கியமான கமெண்ட்களை குறிப்பிட்டு காட்டுவதற்கு உதவும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கமெண்ட்களை ஸ்வைப் செய்து ஷேர் ஸ்டோரி என்பதை தேர்வு செய்து செயல்படுத்தலாம்.

அதனைப் போலவே கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நோட்ஸ் அப்டேட்டில் புதிதாக நண்பர்களுடன் ஆடியோ குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ளும் அம்சம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. மேலும் இன்ஸ்டாகிராமில் ரீல்கள் பத்து நிமிடம் வரை நீட்டிக்க படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்கள் 3 நிமிடங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 10 நிமிடம் வரை நீட்டிக்க படலாம் என கூறப்படுகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் தற்போது சோதனை முறையில் உள்ள நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.