சென்னையில் உள்ள ரெப்போ ஹோம் பைனான்ஸ் நிறுவன கிளைகளில் குறைந்தபட்டியில் வீட்டு கடன் பெறுவதற்கு இன்று பிப்ரவரி 9ம் தேதி ரெப்போ வீட்டுக் கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பாக வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் வீட்டுக் கடன் சேவையை எளிதாக்கும் விதமாக சிறப்பு வீட்டு வசதி கடன் முகாம் நடத்தப்பட உள்ளது.

அண்ணா நகர், வியாசர்பாடி, புரசைவாக்கம் மற்றும் ஆவடி கிளைகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டு வசதி கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மிக குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.