உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் குரங்கு ஒன்று பெண்ணிடமிருந்து பணப் பையைப் பறித்துச் சென்ற சுவாரஸ்யமான சம்பவமும், போலீஸார் தங்களது மதிநுட்பத்தைப் பயன்படுத்தி அதனை மீட்ட விவகாரமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அயோத்தியின் சிவில் லைன்ஸ் பகுதியில் வசிக்கும் அஞ்சு தேவி என்பவருக்குச் சொந்தமான ரூ.42,105 ரொக்கப் பணத்தை குரங்கு ஒன்று திடீரெனப் பறித்துக்கொண்டு அருகில் இருந்த உயரமான இடத்திற்குச் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், பணத்தை மீட்க முயன்றபோதும் குரங்கு அதனைத் தர மறுத்துவிட்டதால் செய்வதறியாது திகைத்தார்.
இந்த அசாதாரணச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த கோத்வாலி நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் அசோக் குமார், பங்கஜ் சிங் மற்றும் தலைமைக் காவலர் குல்தீப் யாதவ், காவலர் அங்கிட் ஆகியோர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
குரங்கைத் துரத்தினாலோ அல்லது பலவந்தமாகப் பிடிக்க முயன்றாலோ பணம் கீழே விழுந்து சேதமடையலாம் அல்லது குரங்கு எறிந்துவிடலாம் என்பதை உணர்ந்த காவல்துறையினர், சாமர்த்தியமான யோசனையைக் கையாண்டனர். அதன்படி, குரங்குக்கு ஒரு வாழைப்பழத்தை நீட்டி அதன் கவனத்தைத் திசைதிருப்பினர். குரங்கு வாழைப்பழத்தை ருசிப்பதில் மும்முரமாக இருந்த அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட போலீஸார், மிகவும் அமைதியாகச் செயல்பட்டு அதனிடமிருந்த பணத்தை வெற்றிகரமாக மீட்டனர். பின்னர் அந்தத் தொகை முழுவதையும் சரிபார்த்து உரிய பெண்ணிடம் பத்திரமாகக் ஒப்படைத்தனர்.
… बंदर !
UP- अयोध्या में एक टैंपो का किराया देते वक्त अंजू के हाथ से रूपयों से भरा बैग लेकर बंदर भाग गया. वह सिविल लाइन पुलिस चौकी में पेड़ पर जाकर बैठ गया काफी मशक्कत के बाद भी पैसों से भरा बैग देने को तैयार नही हुआ. फिर पुलिसवालों ने उसे केले खिलाये. उसका ध्यान बंटा और फिर… pic.twitter.com/7Y7ALyzEXs
— Narendra Pratap (@hindipatrakar) August 19, 2026
“>
காவல்துறையினர் வழக்கமான முறைகளைக் கையாளாமல், தங்களது சமயோசித புத்தியைப் பயன்படுத்தி எளிய முறையில் இந்தப் பிரச்சினையைத் தீர்த்ததை அப்பகுதி மக்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
