கும்பம் ராசி அன்பர்களே, 

இன்று மற்றவர்கள் கூறுவதை கவனித்து பதில் கொடுப்பது நல்லது. யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவது நல்லது. விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணையும். நண்பரின் ஆலோசனை நலம் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் படிப்படியாக விலகி செல்லும். வழக்கு விவகாரங்கள் சாதகமான பலனை கொடுக்கும்.

பணவரவு திருப்தியை கொடுக்கும். புது புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கவனத்துடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். காரிய அனுகூலம் ஏற்படும். பெண்கள் இ‌ன்று சுறுசுறுப்புடன் பணிகளை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.

இந்த நாள் இனிய நாளாக அமையும். இன்று மாணவர்களுக்கு திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். பணவரவு வரக்கூடும். தடைகளை உடைத்தெரியும் சூழல் உள்ளது. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 2, 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்