மகரம் ராசி அன்பர்களே, இன்று உண்மைக்கு புறம்பாக எதிலும் செயல்பட மாட்டீர்கள். நேர்மையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்து கொள்வீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கி கொடுப்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும் பணவரவு தாராளமாக இருக்கும். ஏற்றம் மிகுந்த நாளாக கண்டிப்பாக இருக்கும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். சிந்தித்து எந்த பணியிலும் ஈடுபடுவீர்கள். அடுத்தவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். முன்கோபம் வேண்டாம். கோரிக்கைகள் நிறைவேறும். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சுலபமாக ஜெயிக்கும் சுழல் உள்ளது. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்