தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலன் சார்ந்த கோப்புகளில் மின்னல் வேகத்தில் கையெழுத்திட்டு வரும் முதல்வர் ஜோசப் விஜய், அடுத்ததாக மதுவிலக்கு தொடர்பான மிக முக்கியமான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அருகாமையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளால் மாணவர்களுக்கும், பெண்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கல்வி நிறுவனங்கள் மற்றும் கோயில்களுக்குச் சுற்றுவட்டாரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கான முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறிச் செயல்படும் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

“மாற்றம் என்பது சொல்லில் அல்ல, செயலில் இருக்க வேண்டும்” என்பதற்கு ஏற்ப முதல்வர் எடுக்கவுள்ள இந்த அதிரடி முடிவு, தமிழக மக்கள் மத்தியில் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.